செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

உலகச் சம்பியனாகி வரலாறு படைத்தது பங்களாதேஷ்!

தென்னாபிரிக்க மண்ணில் இடம்பெற்ற 19 வயதிற்கு உட்பட்ட 50 ஓவர் உலகக் கிண்ணத்தை முதல் முறையாக கைப்பற்றி பங்களாதேஷ் அணி வரலாறு படைத்துள்ளது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டம் சற்றுமுன் முடிவுற்றது.

இந்த இறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றிருந்தது. யஷஸ்வி ஜய்சவால் (88), என்.டி.டி வர்மா (38) ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பங்களாதேஷின் பந்துவீச்சில் அவிஷேக் தாஸ் (3), சொரிபுல் இஸ்லாம் (2) விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் 178 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடியது. இதன்போது போட்டியில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக 46 ஓவர்களில் 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 42.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ் அணி சம்பியனாகியது.

துடுப்பாட்டத்தில் ஹுசையின் இமோன் (47), அக்பர் அலி (43) ஓட்டங்களை பெற்றிருந்தனர். இந்தியாவின் பந்துவீச்சில் ரவி பிஷ்னொய் (4) விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதன்படி நான்கு முறை உலகச் சம்பியன் ஆகிய இந்திய 19 வயது அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி முதல் முறையாக வரலாறு ஒன்றை படைத்துள்ளது.

இந்த பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவீட் நவாஸ் செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவனொளிபாத மலை நாளை யாத்திரை காலம் ஆரம்பம்

Tharani

பாதுகாப்பான இடத்தில் குடியேற்றுங்கள்; அவுஸ்திரேலிய குடியேற்ற வாசிகள்

கதிர்

தேர்தலில் களமிறங்கும் திலகரத்ன டில்ஷான்

Tharani