in , ,

உலகத் தலைவர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை சரிவர கையாளவில்லை என பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை செய்து வந்தாலும், அவர் இன்னும் உலகளவில் செல்வாக்குமிக்க தலைவராக இருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள தர உளவு நிறுவனம் ‘மோர்னிங் கன்சல்ட்’ உலகத்தலைவர்களின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒன்லைனில் பொதுமக்களை பேட்டி கண்டு இந்த கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் பிரதமர் மோடி. இவர் 66 சதவீத ஆதரவைப் பெற்றிருக்கிறார்.

கொரோனாவின் இரண்டாவது அலையை சரிவர கையாளவில்லை என்று கூறி அவருடைய செல்வாக்கு குறைந்து விட்டது என எதிர்க்கட்சியினர் குறை கூறினாலும் அவர் செல்வாக்கு உலகளவில் கொடி கட்டிப் பறக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

ஹெரோயினுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது

விமான நிலையத்தின் ஓடுபாதையில் சறுக்கி பிரிட்டிஷ் ஏயார்வைஸ் விமானம் விபத்து