உலகச் செய்திகள்

உலகிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கும் கொரோனாத் தடுப்பூசி!

உலகிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கும் தடுப்பூசி! கொரோனாவைத் தடுக்க கியூபாவின் வியூகம்!

உலகிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது.

கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது. கியூபாவின் மத்திய மாகாணத்தில் முதன்முறையாக நேற்று முன் தினம் முதல் இந்தத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கியூபாவில் அப்டாலா, சோபேரானா ஆகிய கொரோனாத் தடுப்பூசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன. சீனா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்த திட்டமிட்ட நிலையில், கியூபா அதனைச் செயற்படுத்தியுள்ளது. பாடசாலைகளை விரைவாகத் திறப்பதற்காகவே இந்த நடவடிக்கையில் கியூபா இறங்கியுள்ளது.

இதேவேளை, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசிகளை கியூபா செலுத்தி வருகிறது என்று இன்னொரு தரப்பு குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214