உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

உலகை அழிக்கும் கொரோனாவினால் 347,944 பேர் மரணம்!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, ஸ்பைன், பிரித்தானியா மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (26) மதியம் 12 மணி வரை 213 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 5,591,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் 347,944 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,367,961 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 2,875,763 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவர்களில் 53,166 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளாக,

  • அமெரிக்கா > 99,805
  • பிரித்தானியா > 36,914
  • இத்தாலி > 32,877
  • பிரான்ஸ் > 28,432
  • ஸ்பெயின் > 26,837 (ஸ்பெயின் அரசு தமது நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் திருத்தம் செய்து கிட்டத்தட்ட இறப்பு எண்ணிக்கையில் இருந்து 2000 இறப்புக்களை குறைத்துள்ளது)
  • பிரேஷில் > 23,522
  • பெல்ஜியம் > 9,312
  • ஜேர்மன் > 8,428
  • மெக்சிகோ > 7,633

காணப்படுகின்றன.

Related posts

முச்சக்கரவண்டி சாரதி கொலை!

reka sivalingam

நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு மறியல்!

G. Pragas

ஹொரணை விபத்து; பலர் படுகாயம்!

reka sivalingam