உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

உலகை உலுக்கிய அபு பகர் கொல்லப்பட்டான் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க இராணுவம் நேற்று (26) வட மேற்கு சிரியாவில் மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகளின் தலைவன் அபு பகர் அல் பக்தாதி கொல்லப்பட்டான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (27) இலங்கை நேரம் மாலை 7 மணிக்கு உறுதிபட அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அவர் நிகழ்த்திச விசேட உரையில் அபுவின் மரணத்தை உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டார்.

தமது இராணுவம் மேற்கொண்ட திடீர் தாக்குதலின் போது அபு தற்கொலை செயது கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல தடவைகள் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட அபு இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று காணொளி மூலம் வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் பாலூஸ் நகரை இழந்தமைக்கு பழி தீர்க்கும் முகமாக இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இந்தத் தாக்குதல்களில் 282 பேர் கொல்லப்பட்டதுடன், 500 பேர் படுகாயமடைந்திருந்திருந்தனர்.

Related posts

முகக்கவசம் தயாரிக்கும் இலகு வழி – (காணாெளி)

Tharani

தோண்டிய இடத்தில் சிசுவின் எச்சம் இல்லை; வைத்திய அறிக்கை பெற உத்தரவு!

G. Pragas

காெராேனாவால் கூகுள் எடுத்த முடிவு!

Tharani