in

உலக உணவுத்திட்டத்தின் புதிய வதிவிடப்பிரதிநிதி பதவியேற்றார்!!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) வதிவிடப் பணிப்பாளரும், பிரதிநிதியுமான அப்துர் ரஹீம் சித்திக்கி உத்தியோகப்பூர்வமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் டினேஷ் குணவர்த்தனவிடம் தமது சான்றுப்பத்திரத்தை கையளித்து பதவியேற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தல், ஊட்டச்சத்து மேம்பாடு, மற்றும் நிலைபேறான விவசாயத்தின் ஊடாக சிறியளவிலான விவசாயிகளின் நெகிழ்வுத்திறனை வலுப்படுத்தலில் அரசாங்கத்திற்கான ஆதரவின் WFP இலங்கையின் உறுதிப்பாட்டினை சித்திக்கி மீளவலியுறுத்தினார்.

‘தசாப்தங்கள் நீடித்த சிவில் யுத்தத்தின் முடிவு முதல் இலங்கை எட்டியுள்ள சமூகப்பொருளாதார தேர்ச்சி எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது’ என குறிப்பிட்ட அவர், ‘ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு சார்ந்த தற்போதைய சவால்களை அடையாளப்படுத்துவதற்கும், எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு என்னுடைய சக ஊழியர்களும், நானும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நிலைபேறான தீர்வுகளின் ஊடாக இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சமுதாயங்களின் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உறுப்பினரை தாக்கிய பெண் உறுப்பினர்!! கொழும்பு மாநகர சபையில் சம்பவம்!!

கறிச்சட்டிக்குள் விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!!