கட்டுரைகள் சிறப்புக் கட்டுரை செய்திகள் வரலாற்றுப் பதிவுகள்

உலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18

உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை, ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளது. எல்லா பாரம்பரியமும் மதிக்கத்தக்கதே. பாரம்பரிய பெருமைகளை வளர்ந்து வரும் வேகமான யுகத்தில் காப்பது மிக அவசியமாகிவிடுகின்றது. இன்று (ஏப்ரல் 18) உலக பாரம்பரிய தினம்.

உலக பாரம்பரிய நாள் தோன்றியது எப்படி?

1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் “சர்வதேச நினைவிடங்கள் தினமாக “நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச நாள்” கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது. ”உலக பாரம்பரிய தினம்”.

இந்த நாளில் என்ன செய்யலாம் என்று இதே மாநாடு பரிந்துரைத்தது. இதன் படி இந்நாளில்

  • கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது
  • கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம் (நினைவுச்சின்னம்), தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது
  • இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது
  • பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது
  • புத்தகங்கள்,தபால் தலை முத்திரைகள், போன்றவற்றை அச்சிடுவது
  • பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது
  • பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது என்று சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

இவைகள் அல்லாமல் எந்த முறையிலேனும் நம் பாரம்பரியத்தைக் காக்கவும், அதன் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும் உதவுமாயின் அனைத்தும் வரவேற்கத்தக்கதே.

சில சமயம், சில முறைகள் மனிதநலத்திற்கே பெரும் கேடாக விளைகின்றது. அவற்றை களைந்து எடுத்து, உண்மையிலேயே எக்காலமும் பெருமை கொள்ள கூடிய பாரம்பரியத்தையும் மரபுகளையும் காப்போம். உலக பாரம்பரிய தினத்தில் நினைவிடங்கள், அரும் பொருளகங்கள் என்று நின்றுவிடாமல் பாரம்பரிய கலைகள், மொழி வளம், வாழ்க்கை முறை என்று விரிவடைய வேண்டும்.

Related posts

சுஜித் நிலைமை வராமலிருக்க பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

G. Pragas

கரை ஒதுங்கிய 17 அடி முதலை

Tharani

ராஜீவ் கொலை; நளினியின் மனு நிராகரிப்பு

reka sivalingam