கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

மட்டுவில் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய்த்தாக்கம் இருக்கலாம் என கருதப்படும் நபர்கள் தங்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ள நிலையில் அரசினால் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின மாவட்ட ஊடகப்பிரிவிற்கே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் செயல்ப்பட்டு வருகின்ற வேள்விசன் (World Vision) தனியார் நிறுவனத்தினர் நேற்று 650 உலர் உணவுப் பாெதிகளை அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தனர். அதனை தேவைப்படுவோர்களுக்கு பகிர்ந்தளிக்க பிரதேச செயலாளர்களிடம் நேற்று (22) கையளிக்கப்பட்டது.

இவ்வாறு தாமாகவே முன்வந்து உலர் உணவுப்பொருள் உதவிகளை வழங்கிவைத்த வேள்விசன் (World Vision) நிறுவனத்தின் வலைய முகாமையாளர் J.A.ரமேஸ்குமார் அவர்களின் இத்தகைய சேவையிவைக்கு பாராட்டு தெரிவித்த அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா.

மக்களுக்கு தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்கள் தங்களின் விருப்பத்திற்கு கொண்டு சென்று வழங்காமல் பிரதேச செயலகங்களினுடாக அல்லது அரசாங்க அதிபரூடாக மாத்திரம் வழங்களாம் என்றும் இவ்வாறு உதவ முன்வருகின்ற கொடையாளர்கள் நலன் விரும்பிகள் மாவட்ட செயலகத்துடன் அல்லது அரசாங்க அதிபருடன் தொடர்புகொண்டு வழங்கலாம் எனவும் தனி நபர்களுக்கோ சமூகவலைத்தளங்கள் மூலமாகவோ உதவுவதை நிறுத்துமாறு அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (150)

Related posts

ஊட்டத்தச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்த மாணவி

Tharani

ஓகஸ்ட் வரையில் தேர்தல் இல்லை?

reka sivalingam

விவசாயி மரணம்; மக்கள் எதிர்ப்பால் சந்தேக நபர் கைது!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.