செய்திகள்

உள்நாட்டு இறைவரி திணைக்களம் பணியாளர்களுக்கு அடுத்த வாரம் ஊக்குவிப்பு கொடுப்பனவு

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருமான இலக்கை பூர்த்தி செய்தல் தொடர்பான ஊக்குவிப்பு கொடுப்பனவை விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த திணைக்களத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து உரிய கொடுப்பனவுகளை முறையாக செலுத்துமாறு பிரதமர் நிதியமைச்சின் செயலாளர் எஸ்,.ஆர்.ஆட்டிகலவுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதன் பிரகாரம் அடுத்த வாரம் இவ்வருடத்திற்கு உரிய ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும். உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் ஆற்றும் சேவைகளை அரசாங்கம் பாராட்டுகிறது என பிரதமர் குறிப்பிட்டார்.

தொழிற்சங்க பிரமுகர்கள் பதிலளிக்கையில், கொவிட்-19 சந்தர்ப்பத்திலும் தமக்குரிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை பற்றி நன்றி தெரிவித்தார்கள்.

Related posts

வரலாற்றில் இன்று – (30.01.2020)

Tharani

விமல் உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு

G. Pragas

கிளிநொச்சி பொது நூலக வாசிப்பு மாத பரிசளிப்பு விழா.

Tharani