கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

உழவியந்திர சக்கரத்தில் சிக்கியவர் சாவு!

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவு பகுதியில் இன்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி 40ம் கிராமம் வம்மியடி ஊற்று கிராமத்தை சேர்த நல்லையா நாகேந்திரன் (56-வயது) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த போது உழவு இயந்திரத்தின் சாரதிக்கு அருகில் இருந்து வந்தவர் தவறி விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பு சட்டத்தரணி அச்சலாவுக்கு மரண அச்சுறுத்தல்!

G. Pragas

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து வாக்குறுதியளித்த ஜனாதிபதி!

Tharani

சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலம்!

Tharani