கிழக்கு மாகாணம் செய்திகள்

உழவு இயந்திரங்களுடன் எழுவர் கைதாகினர்

சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், 07 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் 07 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், கரடியனாறு பொலிஸ் பிரிவு நிர்வாகத்தின் கீழ் வரும் புத்தம்புரி எனும் காடும் ஆறும் சார்ந்த பகுதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்று மறைந்திருந்த விசேட அதிரடிப்படையினர், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு, மணல் ஏற்றிய நிலையில் உழவு இயந்திரங்களையும் கைப்பற்றி, கரடியனாறு பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களையும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களையும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Related posts

இராணுவ வீரருக்கு கடூழிய சிறை!

G. Pragas

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019- முழு வெற்றியாளர் விபரங்கள்

Bavan

நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது…!

Tharani

Leave a Comment