in ,

உ.சு.ஸ்தாபனத்தின் கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு வருகிறது

கொவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்படவுள்ள அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியின், முதலாவது தொகுதி நாளை மறுதினம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இதற்கமைய, 1 தசம் 44 மில்லியன் தடுப்பூசிகளில் இரண்டு இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் நாளை மறுதினம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் முதலாவது தொகுதி, கொவிட் அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படவுள்ளது.

எஞ்சிய தடுப்பூசிகள், எதிர்வரும் மே மாத இறுதி வரை பல்வேறு கட்டங்களின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

ஹார்கில்ஸ் திரையரங்கு சென்றோரை அறிகுறி இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு!

அமெரிக்கவின் விருதுக்கு தெரிவான ரனிதா!