செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

ஊசி மூல­ம் ஹெரோய்ன்: ஈரல் அழற்­சி­யால் தின­மும் ஐவர் மருத்­து­வ­ம­னை­யில்

ஒரே ஊசி மூல­மாக உயிர் ­கொல்லி நோயான ஹெரோய்னை ஏற்­றிக்­கொண்ட ஐந்து அல்­லது ஆறு பேர் ஈரல் அழற்சி கார­ண­மாக, தின­மும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு வரு­கின்­ற­னர் என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஒரே ஊசி­யால் உயிர்­கொல்லி போதைப்­பொ­ரு­ளான ஹெரோய்னை ஏற்­றி­ய­மை­தான் அவர்­கள் ஈரல் அழற்­சி­யால் பாதிக்­கப்­பட முதன்­மைக்­கா­ர­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­நாட்டு வேலை வாய்ப்­புக்­காக மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­கா­கச் சென்­ற­போதே அவர்­க­ளில் பலர் ஈரல் அழற்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­பது இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. வலி­கா­மம் வடக்கு, வட­ம­ராட்­சிப் பகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­களே இவ்­வாறு அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266