செய்திகள் பிந்திய செய்திகள்

ஊடகவியலாளரிடம் பல மணி நேரம் விசாரணை

வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் அப்பத்திரிகையின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு நேற்று (04) விசாரணைக்காக சென்றார்.

பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, விசாரணைக்காக ஆஜராகிய ஊடகவியலாளரிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கோத்தாபய ராஜபக்சேவுடன் இணைந்து டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப் பெருமாள் உள்ளிட்டோர் தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பிலான செய்தி வெளியாகியமை தொடர்பிலையே விசாரணை நடத்தப்பட்டது.

இதேவேளை குறித்த ஊடகவியலாளர. கடந்த 2 மாதமாக விபத்து ஒன்றில் சிக்கி நடக்க முடியாத நிலையில் இந்த விசாரணையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றி தருமாறு பொலிஸ் தலைமையகத்தை கோரிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டது. விசாரணை திகதியில் மாற்றம் செய்யலாம் ஆனால் விசாரணைக்கு கொழும்பு தலைமையகத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related posts

அறிகுறி தென்படாதோரை கண்டறிவதே சவால் மிக்கது!

G. Pragas

காணாமல் போனவர்கள் குறித்து உறுதிப்படுத்துமாறு மக்களிடம் ஓஎம்பி கோரிக்கை!

Tharani

வவுனியாவில் நாளை மின் தடை

reka sivalingam