செய்திகள் முல்லைத்தீவு

ஊடகவியலாளருக்கு ரிஐடி அழைப்பாணை

முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் (ரிஐடி) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் பொலிஸார் ஊடாக ஊடகவியலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவால் முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, செப்டெம்பர் 25ம் திகதியன்று, முற்பகல் 10 மணிக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு 2ஆம் மாடியில், ஆஜராகுமாறும், அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

Tharani

பெரும்போக நெற் செய்கையாளர்கள் பாதிப்பு!

Tharani

நிர்ணயித்த விலைக்கு நெல் விற்பனை செய்ய முடியவில்லை – விவசாயிகள்

reka sivalingam