செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு நடைபயணம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி துண்டுப்பிரசுர விநியோக விழிப்புணர்வு நடைபயணம் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து இவ்விழிப்புணர்வு நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 2ம் திகதி, அனுஸ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அஞ்சலி நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் விழிப்புணர்வு பயணத்தில ஊடகவியலாளர்கள் முதலில், புத்தூர் பகுதியில் உள்ள சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரவிமர்மனின் வீட்டிற்கு சென்று அவர்களின் உறவினர்களிடம் துண்டுப்பிரசுரத்தை வழங்கியிருந்தனர்.

இதன் பின்னர் சாவகச்சேரி நகரப்பகுதியிலும், அதனை தொடர்ந்து, கொடிகாமம், நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு ஆகிய பகுதிகளுக்கு சென்று கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களை பொது மக்களிடம் கையளித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 6ம் திகதி வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் இவ் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, இன்றைய நடைபயணத்தின் போது ஊடகவியலாளர்களின் படுகொலைகள், கடத்தல்களுக்கு காரணமாக அமைந்தவர்களை சார்ந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

Related posts

விஜய குமாரதுங்கவின் தேமக கோத்தாவுக்கு ஆதரவு!

G. Pragas

யானைத் தாக்குதில் பாதுகாப்பு வீரர் பலி!

G. Pragas

வீதி விதி மீறல் சீட்டை மூன்று மொழியிலும் வழங்க நடவடிக்கை!

G. Pragas

Leave a Comment