செய்திகள் முல்லைத்தீவு

ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய, இராணுவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த திங்களன்று ஊடகவியலாளர்கள் இருவர் மரக்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடமாகாண ஊடகவியலாளர்கள் நேற்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முள்ளியவளைப் பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட வன காரியாலயத்தில் மகஜர் ஒன்றனை கையளிப்பதற்காக ஊடகவியலாளர்கள் வருகைதந்தபோது, அவ்விடத்திற்கு வருகைதந்த இராணுவ உடைதரித்த இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் மாவட்ட வன காரியலயத்திற்கு முன்பாக நாட்டிய மரக்கன்றினைப் புகைப்படம் எடுத்ததுடன், ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும்வகையில் செயற்பட்டனர். (246)

Related posts

கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓடி சிறுவன் சாதனை

Bavan

இன்றைய நாள் ராசி பலன்கள் (6/3) – உங்களுக்கு எப்படி?

Bavan

“கோத்தாவிடமும் கூறியிருந்தோம்! இப்போது உங்களிடமும் கூறுகிறோம்!” – ஜெய்சங்கர்

Bavan