செய்திகள் யாழ்ப்பாணம்

ஊடகவியலாளர் அமரர் ரூபனின் 10ம் ஆண்டு நினைவேந்தல்!

ஊடகவியலாளர் அமரர் சி.செ.ரூபனின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (25) மாலை பொன்னாலையில் எளிமையாக இடம்பெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக மிக எளிமையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில், ரூபனின் சில நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

ரூபனின் நினைவேந்தலை முன்னிட்டு தென்னங்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.

1995ம் ஆண்டு காலப்பகுதியில் “உதயன்” பத்திரிகையின் ஊடாக ஊடகத்துறைக்குள் கால் பதித்த ரூபன், தினக்குரல், வலம்புரி, ஈழநாதம் ஆகிய ஊடகங்களின் செய்தியாளராகவும் பணியாற்றினார். குறிப்பிட்ட காலம் புலிகளின் குரல் வானொலியின் யாழ் செய்தியாளராகவும் பணிபுரிந்தார்.

யுத்தம் தீவிரம் பெற்றிருந்த காலத்தில், படையினரதும் புலனாய்வாளர்களதும் துணை ஆயுதக் குழுக்களினதும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார் – என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிபிசிக்கு எதிராக போராட்டம்!

G. Pragas

அரசின் போக்கு தமிழ் மக்களை அரசிடமிருந்து இன்னும் அந்நியப்படுத்தும்

G. Pragas

ரணில் பலவீனமான தலைவர் – அநுர

reka sivalingam