செய்திகள் பிராதான செய்தி

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; கத்தி வெட்டு

காலி – ஹபராதுவ மீபே பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லசந்த விஜேரத்ன மீது இன்று (14) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.

சுயாதீன ஊடகவியலாளரான லசந்த விஜேரத்ன ஊழலுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினராவார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் மீபே பகுதியில் அமைந்துள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு பிரவேசித்த மூவர் கொண்ட குழு ஊடகவியலாளர் மற்றும் அவரது மனைவிக்கு துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவில் ஒருவர் ஊடகவியலாளரின் கையிலும் வீட்டின் மீதும் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இலஞ்ச ஊழல் தொடர்பில் லசந்த எழுதிய புத்தகம் ஒன்று தொடர்பிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

வான் பாயும் நிலையில் யான் ஓயா நீர்த் தேக்கம்!

Tharani

முல்லை நீராவியடி பிள்ளையார் கோவிலில் புத்தர்

கதிர்

ஹபரணையில் மேலும் மூன்று யானைகள் பலி!

G. Pragas

Leave a Comment