நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நிலைமையால் விடுமுறையை அறிவிக்கவோ அல்லது ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவோ அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அரச தகவல் திணைக்களம் தெரித்துள்ளது.
அத்துடன், விடுமுறை தினம் அல்லது ஊரடங்கு சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிவரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.