செய்திகள் பிரதான செய்தி வவுனியா

ஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் வவுனியாவில் கைது!

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியஇளைஞர்கள் இருவர் இன்று (20) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இரவு 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

எனினும் பொலிஸாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பிச் சென்றனர்.

இதன்போது அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான 10 இற்கும் மேற்பட்ட பொலிஸ் குழு குறித்த இருவரையும் துரத்திச் சென்று பூங்காவீதியில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறிப் பயணித்தமை, வாகனத்தை வேகமாகச் செலுத்தியமை போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இரத்தினக்கல் அகழ்வுக்காக ஒரேநாளில் அனுமதிப் பத்திரம்!

Bavan

மல்லாகம் முகாமில் உள்ள மக்களை சந்தித்தார் தொண்டா

G. Pragas

சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளராக பாடகர் இராஜ்

G. Pragas

Leave a Comment