செய்திகள் பிரதான செய்தி

ஊரடங்கு நீடிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்!

இன்று(26) ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மீண்டும் 2 மணிக்கு மீள ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு மீண்டும் திங்கட்கிழமை (30) காலை 6 மணிக்கே தளர்த்தப்படவுள்ளது.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா ,களுத்துறையில் ஊரடங்கு தளர்வு பற்றிய அறிவித்தல் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.

வடக்கின் நான்கு மாவட்டங்கள் (யாழ்ப்பாணம் தவிர்த்து), புத்தளம் போன்ற மாவட்டஙகளில் நாளை (27) காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பகல் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்பட்டு திங்கட்கிழமை(30) காலை 6 மணி வரைக்கும் மீள அமுலில் இருக்கும்.

ஊரடங்கு நேரத்தில் தத்தம் மாவட்டங்களில் இருந்து வெளியேற தடை செய்யப்பட்டுள்ளது. அரிசி, மரக்கறி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதிப் போக்குவரத்து வழங்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!

Tharani

20, 21ம் நூற்றாண்டு அநீதிக்கு சர்வதேச நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம்

G. Pragas

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் நாட்டுக்கு அபகீர்த்தி!

Tharani