செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

ஊரடங்கை மீறிய 21 பேருக்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 21 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீதியில் பயணித்த 80 பேரின் வழக்குகள் இன்று (26) நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டன.

இதன்போது அவர்களில் 21 பேர் மட்டுமே மன்றில் முன்னிலையாகியிருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை மீறி அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி வேண்டுமென்று பிரதேசத்தினுள் நடமாடித் திரிந்தமையால் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளீர்கள் என்று சந்தேக நபர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் 21 பேரும், தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். அதனால் அவர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட மன்று, 21 பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து உத்தரவிட்டது.

ஏனைய 59 பேரின் வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய மன்றில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்புக்கட்டளை வழங்க நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

பெரும்பான்மையினரை திருப்திப்படுத்தி அரசு செயற்படுகிறது – ஸ்ரீநேசன்

G. Pragas

சஜித்தின் விஞ்ஞாபனத்தில் தமிழர் உரிமைக்கான சமிக்ஞை – ரவீந்திரன்

G. Pragas

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்களே…! விக்னேஸ்வரன் தெரிவிப்பு

Tharani