in

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் தீபிடிப்பதற்கு முன்னர் நடந்த சம்பவம் குறித்து காணொளி வெளியீடு

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் தீ பற்றி எரிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கப்பலில் என்ன நடந்தது என்பது தொடர்பான காணொளி ஓன்று தற்போது வெளியாகியுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 9 கி.மீ. தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலானது கடந்த மாதம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேற்படி தீயை கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் நோக்கில் இலங்கை விமானப்படையினர் முழுமையாக ஈடுபட்டிருந்த வேளையில் இவர்களுக்கு உதவியாக இந்திய கடலோர படையினரும் உதவிக்கு வந்திருந்தனர்.

ஆனாலும் கப்பலில் ஏற்பட்ட தீயை மிகவும் சிரமத்தின் மத்தியில் கட்டுபடுத்தும் வேளை கப்பலானது நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இவ்வாறு தீப்பிடித்து கடலுக்குள் முற்றாக மூழ்கிய நிலையிலுள்ள மேற்படி கப்பலில் மிகப்பெரியளவில் தீங்கு விழைவிக்கும் இரசாயனங்கள் இருந்துள்ளமை தொடர்பான வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

குறித்த கப்பலில் இருந்த சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மிகவும் அபாயகரமான இரசாயனங்கள் மேற்படி பேரழிவு காரணமாக இலங்கை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி

சினோபார்ம் தடுப்பூசிகள் திருட்டு விவகாரம் விசாரணைகள் ஆரம்பம்