in , ,

எஞ்சிய வீட்டு நிதியை கோரி மன்னாரில் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மிகுதி நிதி இது வரை வழங்கப்படாத நிலையில், குறித்த நிதியை உடனடியாக வழங்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று (30) காலை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவன தலைவர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்தனர்.

பொலிஸார் தாக்கினால் தற்காப்பு முறையை கையாள முடியும்!

கிளிநொச்சியில் மோ.சைக்கிள் மோதி பாதசாரி பலி!