செய்திகள்

எதிர்க் கட்சியாக செயற்பட நாம் தயார் – ஜேவிபி

தற்போதைய அரசாங்கத்திற்கு முறையான எதிர்க்கட்சியாக செயற்பட ஐக்கிய தேசிய கட்சிக்கு இயலுமை இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார். 

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு நாட்டை ஆட்சி செய்ய 1825 நாட்கள் காணப்படுவதாகவும், எனினும் தற்போது 14 நாட்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

அதேபோல், அவருக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை அவர் எவ்வாறு பயன்படுத்துவார் என்பது தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். 

Related posts

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

reka sivalingam

ஊரடங்கு வேளையில் சாராயப் போத்தல்கள் திருட்டு!

Tharani

அரண்மனையில் வாழ மாட்டேன் – சபதமெடுத்தார் சஜித்

G. Pragas