செய்திகள்

என் ஆட்சியில் இப்படி நடக்க கூடாது! கோட்டா அதிகாரிகளுக்கு கட்டளை!

எனது ஆட்சியில் அரச சேவை மந்த கதியில் இயங்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (27) மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்திற்கு திடீரென பயணம் செய்திருந்தார்.

இப்பயணத்தின் போது மொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

ஜனாதிபதியுடன் பேசிய பொது மக்களில் சிலர், தாம் பல சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக முறையிட்டனர். மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக மக்கள் தங்கள் முறைப்பாட்டை தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிகாரிகளுடன் பேசிய ஜனாதிபதி, என்னுடைய ஆட்சியில் அரச சேவைகள் மந்தகதியில் இடம்பெற முடியாது. அரச சேவை என்பது மக்களுக்கானது. அதனை அதிகாரிகள் சரியான முறையில் செய்ய வேண்டும்.

அதேவேளை அதிகாரிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்ததாக அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

நெடுஞ்சாலை வலையமைப்பு விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்

Tharani

எல்பிட்டிய தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது

G. Pragas

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த மற்றுமொரு வரப்பிரசாதம்!

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.