செய்திகள் பிராதான செய்தி

என்னிடம் “பெடரல்” இல்லை “ஐக்கியம்” என்பது பெடரலும் அல்ல – சஜித்

ஜனாதிபதி என்ற அடிப்படையில் ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டின் சுயாதீனத்தை, நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பது எனது பொறுப்பு மற்றும் கொள்கையாகும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மஹிந்த ராஜபக்சவின் பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும்,

முன்னாள் ஜனாதிபதி ஐக்கியம் என்ற வார்த்தையை தூக்கிப் பிடித்து பெடரல் (சமஷ்டி) என்ற போர்வையை போர்த்த முனைகிறார். உங்களது ஜி.எல்.பீரிஷ் வெளிநாடு சென்று 13+ஐ ஏற்றுக் கொண்டார். 13+ என்பது பெடரல் என்பதை மஹிந்தவுக்கு தெரிவிக்கிறேன்.

சஜித்திடம் பெடரல் இல்லை. நாங்கள் பெடரல் இலங்கை குறித்து செயற்படுவதில்லை. நாங்கள் செயற்படுவது ஒன்றிணைந்த, ஒருமித்த இலங்கைக்காகவே. ஐக்கிய என்ற வார்த்தையில் எந்தப் பிழையும் இல்லை. ஐக்கிய என்பது பெடரல் அல்ல மஹிந்தவுக்கு ஐக்கிய என்பதை பெடரல் ஆக்க தேவையுள்ளது.

அவருக்கு பெடரல் என்ற மாயை உள்ளது. வித்தியாசமான நோய் உள்ளது. வெளிநாட்டில் 13+ பற்றி பேசுகிறார் நாட்டுக்கு வந்தது 13- பேசுகிறார். இரட்டை நாக்கு அரசியல் செய்வது யார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். என்னிடம் கள்ளத்தனமான வர்த்தகம் இல்லை. – என்றார்.

Related posts

இரு பஸ்கள் மோதியதில் 20 பேர் காயம்!

G. Pragas

பண்ணை கடற்கரையில் யமஹா நிறுவனத்தின் மர நடுகை

G. Pragas

மிளாகாய் தூள் வீசியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – பிமல்

G. Pragas

Leave a Comment