செய்திகள் விளையாட்டு

என்னுடைய மூன்றாவது இடத்தில் டோனி விளையாட வேண்டும் – ரெய்னா விருப்பம்!

எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸில் மூன்றாவது வீரராக டோனி களமிறங்க வேண்டும் என ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரெய்னாவுக்கும், டோனிக்கும் இடையே மோதல் இருந்ததாகவும், சி.எஸ்.கே நிர்வாகத்துடன் ரெய்னாக்கு கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சில நாட்களுக்கு முன்னர் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனை ரெய்னா முழுவதும் மறுத்திருந்தார். தனது சொந்த காரணங்களுக்காகவே போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

ரெய்னா ஆடாததால் அவரின் 3 ஆவது இடத்தில் யார் ஆட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. கௌதம் கம்பீரும் அந்த இடத்தில் டோனி விளையாடினால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது ரெய்னாவும், “3 ஆம் இடமானது அணியின் அத்திபாரம் போன்றது. ஆகவே சர்வதேசப் போட்டிகளில் அந்த இடத்தில் விளையாடிப் பழக்கமான டோனியே தனது இடத்தில் விளையாடினால் சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

காசநோயினால் அதிகமானோர் உயிரிழப்பு

reka sivalingam

40 பசுக்களுடன் இருவர் கைது!

G. Pragas

கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்க ஜனாதிபதி விடுக்கும் அறிவிப்பு

Tharani