செய்திகள்பிரதான செய்தி

‘‘என்னைவிட தம்பியிலேயே அம்மா கூடப் பாசம்’’ ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனின் அண்ணன் வாக்குமூலம்

‘‘அம்மா என்னைவிட தம்பி மீதே அதிக பாசம் கொண்டவர். ஏன் இவ்வாறு ஆற்றில் தள்ளிவிட்டார் என்று தெரியவில்லை’’ என களனி ஆற்றில் தாயார் ஒருவரால் தள்ளிவிடப்பட்ட 5 வயதுச் சிறுவனின் அண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வத்தளை களனி ஆற்றில் கடந்த புதன்கிழமை தனது 5 வயது மகனை தள்ளிவிட்டுவிட்டு தாயொருவர் தானும் குதிக்க முயற்சி செய்த நிலையில் அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த தாயின் மூத்த மகன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதில், மாற்றுத்திறனாளியான அம்மாவுக்கு அம்மாவுக்கு வலிப்பு நோயுள்ளது. அவர் ஊன்றுகோல் உதவியுடன் வெள்ளைநிறத் துணியுடன் தம்பியை அழைத்துக் கொண்டு அன்றைய தினம் மாலைவேளை சென்றார். நான் எங்கே செல்கிறீர்கள் என கேட்டபோது என்னை முறைத்துவிட்டு தம்பியுடன் சென்றுள்ளார்.

முதலில் என்னையும் அழைத்தார். பின் என்னை வரவேண்டாம் என தம்பியை மட்டுமே அழைத்துசென்றார்.

அம்மா என்னை விட தம்பி மீது அதிகமாகப் பாசம் காட்டுவார். சிறு வயதில் பனடோல் தந்து என்னையும் கொல்ல பார்த்தார். ஆனால் எனது சித்திதான் என்னைக் காப்பாற்றினார்.
தம்பி மீதே அதிக பாசம் வைத்துள்ள அம்மா ஏன் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தாயின் சகோதரி தெரிவிக்கையில் , கணவரை விட்டு பிரிந்ததிலிருந்து மனவிரக்தியில் அவர் காணப்பட்டார். எப்பொழுதும் கோபமாகவே நடந்துக்கொள்வார் – என்றார்.

இதேவேளை களனி ஆற்றில் வீசப்பட்ட குறித்த 5 வயதுப் பிள்ளையை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கபட்டு வருகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994