‘‘என் மாருமேல் சுப்பர் ஸ்டார்’’

தமிழ் சினிமாவின் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என 160 இற்கும் மேற்பட்ட படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

அண்மையில் ‘அண்ணாத்த’ படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் ரஜினியின் இன்றைய பிறந்தநாளை #HBDSuperstarRajinikanth ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புதுவித முறையில் தனது வாழ்த்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் ‘‘என் மாருமேல சூப்பர் ஸ்டார்” 80’s பில்லாவும் நீங்கள் தான். 90’s பாட்ஷாவும் நீங்கள் தான். 2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்த். அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த்…… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’’ என டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.

 

Exit mobile version