இந்திய செய்திகள் செய்திகள் பிந்திய செய்திகள் வவுனியா

என் மீது மனநோயாளிகள் திட்டமிட்டு குற்றம்சாட்டுகின்றனர்

வவுனியா விவசாய திணைக்களத்தில் ஊழல் இடம்பெற்றதாக வெளியிடப்படும் கருத்து மனநோயாளிகளின் திட்டமிட்ட செயல் என்று மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபானு தெரிவித்தார்.

வவுனியா விவசாய பண்ணையில் கற்றாலை செய்கைக்காக கற்றாலை உறிஞ்சிகள் கொள்வனவில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,

வவுனியா விவசாய திணைக்களத்தில் முறைக்கேடுகள் 2018ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்தமை தொடர்பாக நான் பொறுப்பேற்றதன் பின்னர் வெளிச்சத்திற்கு வந்திருந்தது. இவை தொடர்பாக கணக்காய்வு திணைக்களம் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் தற்போது என்னை ஊழல்வாதியாக சித்திரிக்க முனைகின்றனர்.

கற்றாலை உறிஞ்சி கொள்வனவு தொடர்பான கணக்காய்வு அறிக்கைக்கு என்னால் பதிலளிக்கப்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இது பெப்ரவரி மாதத்திற்குரிய கணக்காய்வு அறிக்கையாகும். தற்போது அதனை வெளியிட்டிருப்பதானது என்மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்காகவே பார்க்க வேண்டியுள்ளது.

சில மனநோயாளர்கள் என்னை எவ்வாறெனிலும் தம்மைப்போல் ஊழல்வாதியாக சித்திரிக்க முனைகின்றமை வவுனியா மாவட்டத்தில் விவசாய செய்கையின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதமையின் வெளிப்பாடேயாகும்.இது தொடர்பாக விரைவில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன் – என்றார்.

Related posts

சஜித்தின் விஞ்ஞாபனம் 31ம் திகதி

G. Pragas

டிசெம்பர் 3இல் நாடாளுமன்ற அமர்வு

Tharani

சிறுமியுடன் ஒன்றாக இருந்த இளைஞன் உட்பட இருவருக்கு மறியல்

G. Pragas

Leave a Comment