செய்திகள் பிரதான செய்தி

எமது ஆட்சியில் ஒரே நீதி! – கோத்தாபய

நாட்டில் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் உள்ளூர் வணிக சமூகம் எமது ஆட்சியில் முக்கிய பங்கு வகிப்பர் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (25) கோத்தாபய ராஜபக்ஷவின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

நாட்டில் அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி இருக்கும். இதில் இன, மத பேதங்கள் இருக்காது. எனது முழு ஆட்சி காலமும் இந்த தேர்தல் விஞ்ஞாபனமே இருக்கும். வாழக்கை செலவை குறைப்பதே அனைத்து மக்களின் பிரச்சினையாக இருக்கின்றது. அதற்கு உரிய தீர்வை உடனடியாக முன்வைப்பேன்.

உற்பத்திகளை அதிகரித்து மக்கள் மீது சுமத்தப்பட்டுளள வரியை குறைத்து சிறிய வரிகளை அறிமுகப்படுத்த உள்ளேன். சுற்றுலாத்துறை, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, சுகாதாரம், விளையாட்டு, கல்வி போன்ற துறைகளை மேம்படுத்தி அதனூடாக புதிய தொழில்களை ஏற்படுத்த முடியும்.

உலர் வலய விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை செய்து கொடுப்பேன். தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாயம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவோம். நாம் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் தேவையான தொழிநுட்பத்தை வழங்குவோம். எமது இளைஞர், யுவதிகளை நாம் மீண்டும் விவசாய துறைக்கு உள்வாங்க வேண்டும். பெண்களை உற்சாகப்படுத்தி அவர்களின் ஊடாக போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்ய வேண்டும்.

எனது தலைமைத்துவ அரசாங்கத்தில் ஊழலுக்கு இடமில்லை. மக்களாகிய நீங்கள் கொடுத்த பொறுப்பை சிறந்த முறையில் செய்து முடிப்பேன். மேலும் இலங்கையர் என்ற எண்ணத்தில் அனைவரும் செயற்படுவதற்கான நிலைமையை தோற்றுவிப்பேன் – என்றார்.

Related posts

தடை செய்யப்பட்ட 800 கைபேசிகள் கைப்பற்றல்

Tharani

ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்!

reka sivalingam

இலங்கை அரசை பதற வைத்த “ஈழம்” எனும் சொல்!

G. Pragas