செய்திகள் முல்லைத்தீவு

எமது காணியை மீட்டுத் தரும் வேட்பாளருக்கே ஆதரவு!

எமது போராட்டத்திற்கு தீர்வினை வழங்கும் வேட்பாளருக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்போம் என்று தொடர் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும்,

எமக்கு மாற்று நிலங்கள் வேண்டாம். எங்களின் நிலங்களே வேண்டும். மாற்றுக் காணி கிடைத்திருந்தால் எப்போதோ எமது வாழ்வாதாரத்தை மாற்றியமைத்திருப்போம்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக வருபவர்களில் யார் எமது காணிகளை மீட்டுத் தருவார்களோ அவர்களுக்கே ஆதரவு வழங்குவோம் – என்றனர்.

Related posts

உயிலங்குளத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டம்

G. Pragas

பெறுமதியான ஐந்து சங்குகளுடன் இருவர் கைது!

G. Pragas

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரவிகரன்

G. Pragas

Leave a Comment