செய்திகள் பிரதான செய்தி

எமது வெற்றியை எவராலும் தடுக்க முடியாது – தினேஷ்

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்வதை தடுப்பதே எதிர்க்கட்சியினரி்ன் நோக்கம் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“அரசாங்கத்தின் பெரும்பான்மையை தடுப்பதில் கவனம் செலுத்தியதன் மூலம், தற்போதைய எதிர்க்கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெறாது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டுள்ளதால், ஸ்ரீலனாக பொதுஜன பெரமுன தேர்தலில் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கைகள் மூலம் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது” – என்றார்.

Related posts

“ஞானச்சுடர் சஞ்சிகை” 263 ஆவது மலர் வெளியீடு

reka sivalingam

கல்வியற் கல்லூரிகளை தரமுயர்த்த தீர்மானம்!

Tharani

வவுனியாவிலும் தொண்டமானுக்கு அஞ்சலி

G. Pragas