in ,

எம்பியின் வளவுக்குள் சென்று மகனின் மோ.சைக்கிளை தாக்கிய குழு – ஒருவர் கைது!

சிவஞானம் சிறிதரனின் எம்பியின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீட்டிற்கு சென்ற குழுவினர் அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றை சேதமாக்கவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் இன்று (26) மதியம் இடம்பெற்றுள்ளதுடன் நான்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றிருந்த எட்டுப் பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்தியது.

இதன்போது சிறிதரனின் மகன் சாரங்கன் கட்டை ஒன்றால் தாக்கப்பட்டார்.

“உணவம் ஒன்றில் தனது தம்பியின் நண்பர்களை சிலர் தாக்க வந்ததாக கூறப்பட்ட நிலையில் முன்னதாக தம்பியையும், பின்னர் அவரது நண்பர்களையும் அழைத்து வந்த போது, தம்மை விரட்டி வந்த குழுவே தமது வளவுக்குள் நுழைந்ததாகவும், அப்போது தனது முதுகில் ஒருவர் கட்டையால் தாக்கினார். பின்னர் சிசிடீவி இருப்பதை அவதானித்து, தப்பி செல்கையில் தனது மோட்டார் சைக்கிளை பலமாக தாக்கி உடைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்” என்று சாரங்கன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று 26 – போதனாவில் வைத்தியர்கள் உட்பட 19 பேருக்கு உறுதி!

சற்றுமுன் இத்தாவிலில் கோர விபத்து – சிறுவர்கள் பலி!