கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

எம்மை விமர்சிப்பதை கண்டிக்கிறோம் – த.ம.வ.புலிகள் கட்சி

தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ஊடகங்கள் வாயிலாகவும் எம்மை விமர்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார். மேலும்,

ஐரோப்பிய தேர்தல் கண்காகணிப்பு குழுவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள முறைப்பாடானது நூறு வீதம் உண்மைக்குப்புறம்பானது.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள் பலவற்றில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட அவற்றின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை மிக மோசமாக சாடி வருகின்றனர்.

முன்னாள் போராளிகளுடாக குழப்பத்தை ஏற்படுத்த முனைவதுடன் வாக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்கள் தங்களின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கோட்டாபயவை ஆதரிக்க வேண்டும் – என்றார்.

Related posts

விஞ்ஞாபனம் வெளியிட்ட பின்னர் சவாலுக்கு வரத் தயார்

G. Pragas

தனிமைப்படுத்தலை தவிர்த்தாேரை பதிவு செய்ய உத்தரவு!

Tharani

ஆபிரிக்க தூதுவராக கணநாதனை நியமனம்

Tharani