in , ,

எம்.எஸ் டோனியில் நடித்த மற்றுமொரு நடிகர் தற்கொலை!

எம்எஸ் டோனி உள்ளிட்ட படங்களில் நடித்த ஹிந்தி நடிகர் சந்தீப் நாஹர் நேற்று (15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பை கோரேகாவ்ன் பகுதியில் வசித்து வந்த சந்தீப் நேற்று தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது, இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை செய்வதற்கு முன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார் சந்தீப்.

அதில் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும், இதன் காரணமாக மனவேதனை அடைந்து இந்த முடிவை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே போல் தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்.

குழந்தைகளுக்கு நஞ்சூட்டி தற்கொலைக்கு முயன்ற தாய்!

சித்த வைத்திய பட்டதாரிகள் கைதடியில் போராட்டம்!