எம்.பி.களுக்கு தேநீர் விருந்து 2,72,000 ரூபா ரணில் செலவு

இலங்கையின் 09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வுக்கு பின் இடம்பெற்ற தேநீர் விருந்துக்கான செலவைள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியில் செலுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படின் இந்த தேநீர் விருந்து 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை ரணில் தனது தனிப்பட்ட நிதியில் செலவழித்துள்ளார்.

09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஓகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெற்றது.

அதில் ரணில் விக்கிரமசிங்க அரசின் கொள்கை விளக்கவுரை நிகழ்த்தினார்.

அதன்பின்னர் ரணில் விக்ரமசிங்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விருந்தளித்தார்.

அந்த விருந்துக்கே ரணில் இவ்வாறு 272,000 ரூபாவை ரணில் விக்ரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அதிபரின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

Exit mobile version