செய்திகள்வவுனியா

எய்ட்ஸ் தொடர்பில் வவுனியாவில் ஊர்வலம்!

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ”சமத்துவமின்மையை ஒழிப்போம், எய்ட்ஸை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு வவுனியாவில் நேற்று இடம்பெற்றன.

மாவட்ட பாலியல் நோய் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், எய்ட்ஸ் பரவும் முறைகள் மற்றும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. ஊர்வலத்தில் விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

பாலியல் நோய் சிகிச்சை நிலையப் பொறுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவ கலாநிதி கே.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வவுனியா மாவட்ட பொது மருத்துவமனைப் பணிப்பாளர் இ.ராகுலன் , பிரதிப் பணிப்பாளர் , விசேட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994