இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அமைச்சர் தனது முறைப்பாட்டில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனைய நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை தொடங்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் கொள்வனவு, பரிந்துரைகளை மதிப்பீடு செய்தல், முன்பதிவு செய்தவர்களுக்கு எரிபொருள் வழங்காமை, விநியோகஸ்தர்கள் தெரிவு மற்றும் விநியோக முறைமை குறித்து மேற்படி நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- Home
- uncategorized
- எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முறைப்பாடு!
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முறைப்பாடு!
