அமைச்சர்கள் இருவர்கள் நாளை ரஷ்யாவுக்கு பயணிக்கவுள்ளனர் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு அமைச்சர்கள் இருவரும் ரஷ்யா பயணிக்கவுள்ளனர் என்றும், இந்த பயணத்தின் போது எரிபொருள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக இலங்கைக்கு சாதகமான பதிலொன்றை எதிர்பார்க்கின்றோம் என்றும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.