செய்திகள் பிரதான செய்தி

எரிபொருள் விநியோகம் பாதிக்காது – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அமெரிக்கா  மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக நாட்டுக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் ஆகக்கூடியளவான எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 நாட்களுக்கு அவை போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவசியம் ஏற்பட்டால் ஹம்பாந்தோட்டையில் உள்ள எரிபொருள் தாங்கியை பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இன்றைய நாணயமாற்று விகிதம்

Tharani

வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமையட்டும்

Tharani

சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 11 பேருக்கு கொரோனா இல்லை

G. Pragas