செய்திகள்தலைப்புச் செய்திகள்தலையங்கம்

எரிபொருள் விலையில் மீள் திருத்தம்? இன்று முடிவு!

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை மீள திருத்துவதற்கான சாத்தியப்பாடு உள்ளதா என்பது தொடர்பில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (14) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுகின்ற அமைச்சரவைக்கூட்டத்தின்போது இது தொடர்பில் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படவுள்ளது என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்ததால் ஏனைய சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையும் விரைவில் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விலை உயர்வை அரசு மீளப்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அதிகரிக்கப்பட்டுள்ள விலை உயர்வை மீள திருத்துவது தொடர்பில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,061