செய்திகள் பிந்திய செய்திகள்

எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

கொழும்பு பங்குச்சந்தைப் பட்டியலிலுள்ள Laugfs எரிவாயு நிறுவனத்தின் பங்கு விலைகளை செயற்கையான முறையில் மாற்றிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு கொழும்பு – கோட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

Laugfs எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H.வேகபிட்டிய, U.K.திலக் என் டி சில்வா, தக்‌ஷில ஐ ஹுலங்கமுவ ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செயற்கையான முறையில் பங்குச்சந்தை செயற்பாடுகளை வழிநடத்துவதற்குத் திட்டம் தீட்டியமை மற்றும் Laugfs எரிவாயு பங்கு விலைகள் தொடர்பில் குறித்த குற்றத்தை புரிவதற்கு உடந்தையாக செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகள் குற்றவாளிகளாக காணப்பட்டால் அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பதற்கான இயலுமை உள்ளது என்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

எரிபொருள் விலைத் திருத்தம்; நிதி அமைச்சு திடீர் பல்டி

G. Pragas

விபத்தில் மூன்று மாணவிகள் உட்பட நால்வர் படுகாயம்!

G. Pragas

எழுக தமிழ் பிரகடணம்

G. Pragas

Leave a Comment