in , ,

எழுமாற்று பி.சி.ஆரில் 54 பேருக்கு தொற்று உறுதி!! – கைமீறியது வவுனியா நிலைமை!!

வவுனியா நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 54 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா – பட்டாணிச்சூரில் 7 பேருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பட்டாணிச்சூர் பிரதேசமும் முடக்கப்பட்டது.

பட்டாணிச்சூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவன் ஒருவருக்கும், கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் முதலில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

அதன்பின்னர் பட்டாணிச்சூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து நேற்றுமுன்தினம் வவுனியா நகர் பகுதியில் எழுந்தமான அடிப்படையில் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.

நகர்ப் பகுதில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், அங்கு பணியாற்றுபவர்கள், பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் என 204 பேருக்குப் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றின் முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், 54 பேருக்குக் கொராேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வவுனியா நகரை முடக்கி பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் ஆலோசித்து வருகின்றனர்.

சில வாரங்களாக அமைச்சு கூட்டங்களில் தயாசிறி பங்கேற்கவில்லையாம்!

தந்தைக்கு நீதி கேட்டு ஐநாவில் முறையிட்ட அஹிம்சா விக்ரமதுங்க