செய்திகள் பிரதான செய்தி

எழுபதாயிரம் பேர் கைது; 25 ஆயிரம் பேர் மீது வழக்கு!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி மாலை 6 மணிமுதல் நாடளாவிய ரீதியில்ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்ததுடன், கடந்த மே மாதம் 11ம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு குறிப்பிட்ட காலப் பகுதிக்கு மாத்திரம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 70 ஆயிரத்து 272 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 19 ஆயிரத்து 952 வாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவேன்! – சஜித்

G. Pragas

மரக்கன்றுகளும், விதைகளும் வழங்கி வைப்பு!

G. Pragas

இன்று 13 பேருக்கு தொற்று!

G. Pragas