செய்திகள் பிராதான செய்தி

எஸ்பியின் பாதுகாவலர்களுக்கு மறியல்

கினிகத்தேன, பொல்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவின் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்தியபோதே அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts

இந்த அரசு தேசிய பாதுகாப்பிற்கு முக்கியம் வழங்கவில்லை – கோத்தாபய

G. Pragas

பெயரை மீண்டும் மாற்றிய நடிகை

G. Pragas

இதுவா சிறந்த தலைமைத்துவம்? கோத்தாவை தாக்கிய சஜித்!

G. Pragas

Leave a Comment