செய்திகள்

ஏழு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல்

கொத்மலையில் பாடசாலை மாணவிகள் 7 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொத்மலை ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் சாந்தனி மீகொட முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே சந்தேகநபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 7 மாணவிகளும் சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உருளைக்கிழங்கிற்கான வரி குறைப்பு!

Tharani

யாழில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு!

G. Pragas

துப்பாக்கியுடன் கைதான இருவருக்கும் மறியல்!

G. Pragas