செய்திகள் பிரதான செய்தி

ஐக்கிய நாடுகளின் செயற்குழு கூட்டம் 14ம் திகதி ?

பலவந்தமாக அல்லது தன்னிச்சையாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 120வது செயற்குழு கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும், அதில் இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 530 சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் ஐந்து சுயாதீன நிபுணர்கள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், காணாமல் போன உறவினர்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பொது அமைப்புக்களின் அங்கத்தவர்களை சந்தித்து வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான நடைமுறைகள் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அரசாங்கங்கள் சட்டரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் எடுத்துள்ள நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் இதன்போது ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

படகு கவிழ்ந்து ஒருவர் பலி! இருவரை காணவில்லை!

G. Pragas

மதுபான சாலைகள் மூடப்படும்

reka sivalingam

கட்டுப்பணம் செலுத்திய தகவலை மறுத்தார் மகேஸ்

G. Pragas

Leave a Comment